“எவ்வளவு நாட்களுக்குத் தான் கஸ்டப்படுவது. சொந்த இடத்திற்கே செல்வோம்” என்ற தைரியத்துடன் வவுனியா நோக்கி பயணப்பட்டாகிவிட்டது. தாண்டிக்குள சோதனைச்சாவடியில் கடும்சோதனைகளுடன் உள்ளெடுக்கப்படுகின்றோம். எனது குடும்பத்தினருக்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. காரணம் எனது மூத்த சகோதரிக்கு கூட அப்போது 13 வயது தான். ஆனால் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள இளவயதுக்காரர்கள் புறம்பாக இருத்தப்பட்டு வவுனியா கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
முதலில் தாண்டிக்குளம் மகாவித்தியாலத்திற்கு நாங்கள் கொண்டு செல்லப்பட்டோம். ஒருநாள் அங்கு இருந்திருப்போம். அன்று அங்கு நாங்கள் சென்றதில் இருந்து யாழ்ப்பாணம் வரும் வரை ஒரு விடயத்தில் குறைவே இருக்கவில்லை. அது தான் சாப்பாடு. அந்தப் பொறுப்பை அரசாங்கமோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ கவனித்துக் கொண்டன என தெரியாது. ஆனால் அகதிகளாக வந்த எம்மைப்போன்றவர்களுக்கு மூன்று வேளை சாப்படையும் தவறாமல் வவுனியா – திருகோணமலையில் தந்திருந்தார்கள். அவர்கள் தரும் உணவு எங்களுக்கு மிதமிஞ்சியதாகத் தான் இருந்திருக்கின்றது.
மறுநாள் தாண்டிக்குளத்தில் இருந்து பூந்தோட்டம் முகாமிற்கு மாற்றப்பட்டோம். தற்போது வவுனியா தேசிய கல்வியல் கல்லூரி அமைந்திருக்கும் கட்டடம் தான் அது. கல்விக்காக கட்டப்பட்ட அந்த நிலையம் அகதிகளைத் தான் முதலில் வரவேற்றது. அந்த வரலாறு அக்கல்லூரிக்கு என்றுமே இருக்கும். மாணவர்களுக்காக கட்டப்பட்டது என்பதால் மலசலகூடம் மற்றும் குளியலறை வசதிகளும் தாராளமாகவே இருந்தது. அங்கு இரண்டு மூன்று நாட்கள் இருந்திருப்போம். நாங்கள் யாழ்ப்பாணம் செல்லப் பதிவு செய்திருந்ததால் வவுனியா - வேப்பங்குளம் முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து ரெயில்வே ஸ்டேசனுக்கு கொண்டு செல்லப்பட்டோம்.
முதன்முதலில் ரெயினில் ஏறப்போகின்றேன். திருமலை நோக்கிய பயணமும் ஆரம்பித்தது. வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு சிரிப்பான சம்பவம் அந்த ரெயினில் இடம்பெற்றது. அதாவது வழமையாக ரெயினில் உணவுப்பொருட்களை விற்றுத்திரிவார்கள். அது சுகமான நினைவுகளைத் தரும். “யாழ்தேவியில் காதல்செய்வோம்…” பாடலில் கூட அதைப்பயன்படுத்தியிருப்பார்கள். அன்றும் ஒரு யோர்க்கட்டை வாங்கினேன். அது ஐஸ்கிறீம் என நினைத்துத் தான் அப்பா வாங்கித்தந்தார். சாப்பிட்டேன் புளித்தது. அதுவரை யோர்க்கட்டை நாங்கள் சாப்பிட்டதில்லை. அதனால் ஐஸ்கிறீம் பழுதாகிவிட்டது என நினைத்து எறிந்துவிட்டோம். அது யோர்க்கட் தான் என்பதை திருமலையில் ஒரு நண்பர் தெளிவு படுத்தினார். (ஹீஹீ நாம அப்பவே பல்பு வாங்கியிருக்கிறம்)
அப்போது கோணேஸ்வரத்தில் பூசகராக இருந்தவர் யாழ் - தாவடியைச் சேர்ந்தவர். அதனால் நாங்கள் அவருடன் நெருக்கமாக உரையாடினோம். அதன்போது அவர் இணுவிலைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து மணம் முடித்ததாக குறிப்பிட்டார். அந்தப் பெண்ணை என் அத்தைக்கு பழக்கம். இதனால் இன்னும் நெருக்கமாகிவிட்டோம். அவர் தன் கதையைச் சொன்னார். தன்னுடன் சண்டைபிடித்துக் கொண்டு மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக கவலைப்பட்டார். நாங்களும் அவருக்கு அனுதாபம் தெரிவித்தோம்.
பின்னாளில் இலங்கையையே உலுக்கிய கொலை வழக்கின் சூத்திரதாரி அந்த ஐயர். தனது மனைவியை தனது உதவியாளருடன் சேர்ந்து தலையணையால் அமுக்கி கொலை செய்து தன் வீட்டின் பின்னாலேயே புதைத்து வைத்தார். புனிதமான இடத்தில் நடந்த கொலைப் பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.
திருமலையில் இருந்து யாழ் நோக்கி கடல்மார்க்கமாக பயணம்படுவதற்காக இயற்கைத் துறைமுகம் நோக்கிய பணம் ஆரம்பமாகியது.
அவல நினைவுகள் அடுத்த பாகத்துடன் நிறைவடையும்.


6 comments:
நடத்தவைகளை கண்முன்பு பார்ப்பது போல உள்ளது
இன்றய ஸ்பெஷல்
நடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு
அகதியான முகாம் வாழ்வையும் பயண அனுபவங்களையும் பகிர்ந்து சென்றாளும் !
உங்களின் தனிப்பட்ட காரணத்தால் விரைவில் முடிக்க வேண்டிய காரணத்தால் இடையில் வேகமாக பதிவு செல்வது புரிகின்றது பாஸ்!
கோனேஸ்வர் ஆலயம் பட்டினசாலைக் கப்பல் பயணம் என பின் சென்ற நாட்களை ஞாபகப்படுத்துகின்றீர்கள்!
நீங்க சொல்வது படிப்பவர்களையும் கூடவே அழைத்துச்செல்வதுபோல நல்லா இருக்கு.
இரவு வணக்கம்,வரோ!இனிய நத்தார் வாழ்த்துக்கள்!!!////மனக்கண்ணில் காட்சிகள் ஓடுகிறது.
நத்தார் வாழ்த்துக்கள் பாஸ் ;))
Post a Comment