Pages

Monday, December 26, 2011

வரோ ஒரு மிருகம்!


1995ஆம் ஆண்டு இடம்பெயர் கால நினைவுகள் - பாகம் 09

தொடரின் முன்னைய அத்தியாயங்களைப் படிக்க 


திருகோணமலையில் அகதிகளைத் தங்கவைப்பதற்காக இரண்டு நலன்புரி நிலையங்கள் இயங்கின. ஒன்று “கிளாஸ்பக்டரி”, மற்றையது “சங்கமித்தை”. கப்பல் பயணத்தின்போது முதலில் சங்கமித்தையில் இருப்பவர்களே ஏற்றப்படுவர்.

1995 - 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் - திருமலை கப்பல் சேவைக்காக மூன்று பயணிகள் கப்பல்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. “தாரகி”, “நறோமா”, எண்டூரன்ஸ்”. பொருட்களை ஏற்றி இறக்குவதற்காக “லங்காமுடித” என்ற கப்பல் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் அதுவும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.

எங்கள் பயண நாளில் வழக்கத்துக்குமாறான கொஞ்சம் வடிவாகவே வெளிக்கிட்டோம். (ஊர்போக போகின்றோம் என்ற சந்தோசம் ஒருபுறம், முதல் தடவை கப்பலில் ஏறப்போகின்றோம் என்ற சந்தோசம் இன்னொரு புறம்) இயற்கைத்துறைமுகமாம் திருமலையில் வந்திறங்கியாகிவிட்டது. ஏற்கனவே சங்கமித்தையில் இருந்தவர்களை நறோமா, எண்டூரன்ஸில் ஏற்றியாகிவிட்டது. அவை இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு விட்டன. ஒப்பீட்டளவில் அவை வசதி குறைந்த கப்பல்கள். கொஞ்சம் பெரிய – சொகுசான கப்பல் தாரகி. அதில் ஏறும்பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. அதுவும் மேல்தளத்தில். சிறுவனான நான், ஆடிப்படி உண்டு மகிழ்ந்து உறங்கிவிட்டேன். விடிய எழுந்து பார்த்த நான் கப்பல் அந்த இடத்திலேயே நங்கூரம் இட்டு நிற்பதைக் கண்டு திகைத்தேன்.

அப்பாவிடம் வினவிய போது, கடலில் திடீரென சண்டை மூண்டதால் எங்கள் கப்பல் மட்டும் புறப்படவில்லை என கூறினார். மறுபடியும் கப்பலில் இருந்து இறக்கி சங்கமித்தை முகாமுக்கு அனுப்பபட்டடோம். கடற்கரையுடன் அமைந்திருந்தது அந்த முகாம். நிறைய மான்கள் அங்கு உண்டு. நாள்தோறும் இரவு – பகல் என கடலை வேடிக்கை பார்ப்பதுண்டு. நாங்கள் இடம்பெயர்ந்தபோது பல இடங்களிலும் அவதிப்பட்டது தண்ணீருக்குத்தான். அது இங்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. அருமையான கன்ரீன் ஒண்டும் இருந்தது. அங்கு வாங்கி உண்ட உணவுகள் மறக்கமுடியாது.

ஒருவாரத்தின் பின் மீண்டும் கப்பலில் ஏற்றப்பட்டோம். இம்முறை எங்களுக்கு கிடைத்தது எண்டூரன்ஸ். வசதிகள் அவ்வளவு போதுமானதாக இல்லை. இருக்கைகள் கூட பஸ்ஸில் இருப்பதைப் போலவே இருந்தது. உயிர்ப்பாதுகாப்பு விளக்கத்தினை கொடுத்தபோது எங்களுக்கு பயம் தொற்றிக்கொண்டது. பயணம் தொடர்ந்தது. கடல்பயணத்தையும் வாந்தியையும் பிரிக்க முடியாது. அது வேற தொல்லை கொடுத்தது. நள்ளிரவில் கண்விழித்து பார்த்த போது நிலாவொளியில் கடல் மணற்றரை போல காட்சியளித்ததை மறக்க முடியாது.

18 மணித்தியாளங்கள் கடல் பயணத்தின் பின் காங்கேசன்துறையை வந்தடைந்தோம். ஏற்கனவே எங்களை முந்திக்கொண்டு வந்திருந்த தாரகி கப்பலில் இருந்து ஆட்களையும், சாமான்களையும் இறக்கி மீண்டும் திருமலை செல்பவர்களை ஏற்றும் வரை பல மணி நேரம்வரை காக்க வேண்டியதாகிவிட்டது. பிறகு எங்களையும் இறக்கி பஸ்களில் மூலம் உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இறக்கினார்கள். (பெயர் ஞாபகம் இல்லை). மறுநாள் விடிய யாழ் நகரம் நோக்கி பயணமானோம்.

யாழ் - சென்.ஜோன்ஸ் கல்லூரில் இறக்கிவிட்டார்கள். பதிவுகளை முடித்துக் கொண்டு 400 ரூபாவுக்கு ஒரு ஆட்டோவை பிடித்துக்கொண்டு வீடு திரும்பினோம். இடை வழியில் பஸ்நிலையத்தின் பின்புறம் உள்ள உணவகம் ஒன்றில் ரோல்ஸ் சாப்பிட்டதையும் மறக்க முடியாது. ஒருவாறு வீடு வந்து சேர்ந்தாகிவிட்டது. அந்த நேரத்தில் இராணுவத்தினர் எங்கள் பிரதேசங்களுக்குள் இல்லை. மருதனார்மடத்துக்கும் - கொக்குவிலுக்கும் இடைப்பகுதியில் எந்தவொரு இராணுவமும் இருக்கவில்லை. சுற்றிவளைப்புக்களுக்கு மட்டும் அடிக்கடி வருவார்கள். நாங்கள் சென்று சிறிது நாட்களுக்குள் எங்கள் இடங்களுக்கும் வந்துவிட்டார்கள்.

1995ஆம் ஆண்டு இடப்பெயர்வு ஆரம்பித்த நாள் ஒரு கந்தசஸ்டி விரத்தின் இறுதி நாள் என்பது உங்களுக்கு தெரியும். நாங்கள் மீண்டும் யாழ் வந்தது அடுத்த வருட சரஸ்வதி பூசையின் இறுதி நாள். ஹாஹா.. கடவுள் இருக்கிறார். எல்லா அநியாயங்களையும் பார்த்துக் கொண்டு.


முற்றும்.

டிஸ்கி : இது எனக்கான பதிவு. அதனால் வாக்கு, பின்னூட்டம் பற்றியெல்லாம் கவலைப்பட்டது கிடையாது. கடைசி நான்கு அத்தியாயங்கள் விரைவாக முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டது. சம்பவங்களை மட்டும் பதிந்திருந்தேன். சோக – சந்தோச எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. 

தலைப்பு விளக்கம் : அண்மையில், பிரபல பதிவர் ஒருவரிடம் இருந்து எனக்கு கிடைத்த வாழ்த்து மழை.


7 comments:

துஷ்யந்தன் said...

வரோ மிருகமா???????????????????????? அவ்வவ்வ்வ்வ்
அவங்களுக்கும் தெரிஞ்சு போச்சா....!!
ஹீ ஹீ... கோவிக்காதீங்க அண்ணே... சும்மா ஜோக்கு :)))

துஷ்யந்தன் said...

அப்புறம் அந்த பிரபலம் யார் என்று சொல்லவே இல்லையே!!!!!!!!
மிருகமா இருக்கிரவனுக்குத்தான் பாக்கிறவனை எல்லாம் மிருகமா தெரியுமாம் :(

துஷ்யந்தன் said...

இந்த தொடரில் இடையிடையே படிக்காமல் தவற விட்டு விட்டேன்..
அதனால் முழுதாய் கருத்து சொல்ல முடியவில்லை.....
ஆனாலும் படித்த மட்டில் பல தெரியா தகவல்களை அள்ளி வழங்கிய தொடர்.

சி.பி.செந்தில்குமார் said...

R U ANIMAL HI HI HI

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் இந்த தொடரை நான் முழுமையாக படிக்கவில்லை சில பகுதிகளை தவற விட்டு விட்டேன்....

இந்த தொடர் பற்றி சுருக்கமாக சொன்னால்

வலி நிறைந்த நினைவுகளை சொன்ன அருமையான தொடர்...அம்புட்டுதான்

வாழ்த்துக்கள் பாஸ்

ஜீ... said...

திருகோணமலையிலிருந்து தனியாக யாழ்ப்பாணம் 'லங்காமுடித' கப்பலில் போயிருக்கிறேன். எந்தவசதியும் இல்லாமல், இருக்கைகள் கிடையாது அதே 18 மணித்தியாலம்! அவ்வ்வ்!

விண்மீன்கள் said...

நன்றி சொல்ல்பவர் சொல்லட்டும் நீங்கள் தொடருங்கள்