Pages

Tuesday, January 10, 2012

நண்பன் - ALL IS WELL

ALL IS WELL - “எல்லாம் நல்லதுக்கே” – “நல்லதே நடக்கும்” என்கின்ற பாசிட்டிவ்வான கருத்து. இதையே எங்க பேச்சு வழக்கில் சொல்லிறதெண்டா “எல்லாம் அந்த மாதிரி” என்றும் சொல்லலாம். எங்கள் வாழ்க்கையில் எல்லாமே நல்லதாக நடக்க வேண்டும் என்றால், அதில் ஒரு பங்கு எங்கள் நண்பர்களுக்கும் உண்டு. எங்களுக்கு கிடைக்கும் சந்தோசங்களை எல்லாம் தனக்கு ஏற்பட்டதாக நினைத்து சந்தோசப்படவும், எங்களுக்கு நேரும் துன்பங்களை எல்லாம் தனக்கு நேர்ந்தாக நினைத்து துயரப்படவும் எங்களுக்கு ஒரு நட்பு அவசியம். அத்தகைய ஒரு நட்பையாவது நீங்கள் உங்களுடன் வைத்திருக்கிறீர்களா? அல்லது நீங்களாவது யாருக்கும் அவ்வாறானதொரு நட்பை வழங்குகின்றீர்களா?
நண்பர்கள் எல்லோருக்குமே வாய்த்துவிடுவதுண்டு. ஆனால் உற்ற நண்பர்கள் அல்லது உயிர் நண்பர்கள் என்று சொல்லும் அளவிற்கு நட்பு வாய்த்துவிடுவதென்பது மிக மிக அரிதானது. எங்களுக்குக்காக தன்னுயிரைத் தராவிட்டாலும், எங்கள் உயிரை எடுப்பதற்கென்றே பல நட்புக்கள் வாய்த்துவிடுவது இயற்கையானது. இதனால் உண்மையான நட்பை இணங்காண்பதென்பது எங்கள் ஒவ்வொருவருக்குமே சவாலானது.

நண்பர்களுக்கு பலரும் பல விதமான வரைவிலக்கணங்களைக் கொடுப்பார்கள். என் நண்பர் ஒருவர் கொடுத்த விளக்கம் இது, “பெற்றோர்கள் தான் உலகம் என வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு அந்த உலகத்தைத் தாண்டி பறக்க சிறகு தருபவர்கள் நண்பர்கள். அவர்கள் தான் எங்கள் உயரத்தை அளக்கும் அளவு கோலாகவும் திகழ்கின்றார்கள். எமது ஒவ்வோர் ஏற்றங்களுக்கும் தாமே ஏணியாக இருந்து அர்ப்பணிப்பவர்கள், நாங்கள் தடம் மாறி விழும்போது கூட மண்ணில் விழாது எம்மை தங்கள் கரங்களால் தாங்குபவர்கள். சிலவேளைகளில் வாழ்வின் வெற்றி என்பது கூட நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கின்றது”.

ஒத்த எண்ணவோட்டங்களைக் கொண்டவர்கள் நண்பர்கள் ஆகின்றனர். அதில் தீய நண்பர்கள் கூட்டம் எது? நல்ல நண்பர்கள் கூட்டம் எது? என்பதை சமூகம் தீர்மானித்துக் கொள்ளும். ஆனால் அவர்கள் தங்களுக்குள் புரிந்துணர்வுடன் செயற்படுவார்கள். இதில், தீயவர்கள் தங்களை நல்லவர்களாக காட்ட முயலும்போது தான் புதிது புதிதாக பிரச்சினைகள் வெடிக்கின்றது. (கொள்ளைக்காரனுக்கு கொள்ளையடிப்பது நேர்மை என்று பட்டதனாலேயே அவன் தொடர்ந்தும் கொள்ளையடிக்கின்றான்)

எங்களைச் சுற்றியிருக்கும் நட்புக்கள் எவ்வாறானதொன்பதை நாங்கள் இனங்காண்பது ஒன்றும் அவ்வளவு கஸ்டமான காரியமல்ல. இருந்தும், சிலர் எங்கள் கண்களில் மண்ணைத்தூவி விட்டு எங்களுடன் நல்ல நட்பாக உறவாடுவார்கள். காலமும் நேரமும் கனிந்து வரும்போது அவர்களின் உண்மை முகம் வெளிப்பட்டுவிடும். அப்படி வெளிப்படும் போது தோற்றவர்கள் நாமாகத் தான் இருப்போம். 
கடந்த 25 வருடங்களில் யாழ்ப்பாணம் - கொழும்பு – லண்டன் என பல நட்புக்களைப் பார்த்தாகிவிட்டது. வாழ்க்கையின் பல்வேறு கோணங்களை அறிந்து கொள்ள முடிந்தது. இருந்தும், இந்தக் காலப்பகுதியில் ஒரு உற்ற நட்பைக் கூட நான் சேர்த்திருக்கவில்லை என்பது எனக்கே வருத்தமாக இருக்கின்றது. “என் உயிர் நட்பு அவர்கள்” என நினைத்து பழகிய பலர் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள். தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் என் மனவோட்டத்தை ஒத்த எவரையும் நான் சரியாக இனம் காணவில்லை என்றே நினைக்கின்றேன். சிலவேளைகளில் “நான் ஒரு விதிவிலக்கானவனா?” என்ற கேள்வியும் எனக்குள் எழுவதுண்டு. என்னைப்புரிந்து கொள்வது மிகவும் கடினமான விடயம் என்பதை எனக்கு வாய்த்த நண்பர்களைக் கொண்டு நான் அளந்து கொண்டேன். இதனால் எல்லோருடனும் “பட்டும் படாமலும்” நட்பாக இருந்து விடுவது என்பதை சில காலங்களுக்கு முன்பே தீர்மானித்து விட்டேன்.

மற்றவர்களுக்கு உற்ற நண்பனாக நான் இருக்காவிட்டாலும், துரோகம் இழைக்காத நண்பனாக நான் இருப்பேன் என்பது எனக்குத் தெரியும். உற்ற நண்பனாக இருந்தாலும் அவனையும் நம்பக்கூடாது என்பது நான் கற்ற பாடம். இதை விதி எனக்குக் கற்பித்தது.

ஒவ்வொரு ஏமாற்றங்களின் போதும் எல்லாம் நல்லதுக்கே என நினைக்கப் பழகிவிட்டேன்.
ALL IS WELL

Post Comment

15 comments:

மருதமூரான். said...

அப்ப இது விஜய்யின் “நண்பன்“ பற்றிய பதிவில்லையா..............?!

நல்ல நண்பர்கள் எல்லோருக்கும் அவசியம்!! அகசியம் ஓணர் நண்பர்கள் பற்றி எழுதியிருக்கிறார் நண்பன் சீசனில்!!

KANA VARO said...

மருதமூரான். said...
அப்ப இது விஜய்யின் “நண்பன்“ பற்றிய பதிவில்லையா..............?!

நல்ல நண்பர்கள் எல்லோருக்கும் அவசியம்!! அகசியம் ஓணர் நண்பர்கள் பற்றி எழுதியிருக்கிறார் நண்பன் சீசனில்!!//

பதிவின் எந்தவொரு இடத்திலும் விஜய் பற்றியோ, நண்பன் படம் பற்றியோ குறிப்பிடவில்லை. ஆனால் தலைப்பை பார்த்து “விஜய் படம்” பற்றிய பதிவு என நினைப்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. நண்பன் ஸ்டில் போடுவோமா? விடுவோமா? என்ற நீண்ட யோசனைக்குப் பிறகு அதையும் தவிர்த்து விட்டேன்.

Lakshmi said...

நல்ல நண்பர்கள் கிடைப்பது பெரிய வரம்தான்.

காட்டான் said...

அட நானும் பொடியனுக்கு நண்பன் காச்சல் வந்துட்டு என்றெல்லோ நினைச்சேன்..!!

உண்மையான நற்பு இன்னும் இருக்கு வரோ அது உங்களுக்கு இன்னும் வாய்க்கவில்லை அவ்வளவும்தான்..!!

Yoga.S.FR said...

வணக்கம் வரோ!காலமாற்றம் எல்லாவற்றையுமே மாற்றிவிட்டது என்பதே உண்மை!உலகம் அவசரக் குடுக்கையாகிவிட்டது இல்லையா?அதனால் இந்த நிலை!ஓடும் புளியம்பழமும் போல் என்று சொல்வார்களே?அப்படி ஆகிவிட்டது நட்பு!

Yoga.S.FR said...

என்றாலும் உங்களுக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான்!(தலைப்பைச் சொன்னேன்!நிரூபன் பாஸ் வழிகாட்டலோ?)

KANA VARO said...

Lakshmi said...
நல்ல நண்பர்கள் கிடைப்பது பெரிய வரம்தான்.//

நல்ல நண்பன் வேண்டுமென்று மரணமும் நினைக்கின்றதா?

KANA VARO said...

காட்டான் said...
அட நானும் பொடியனுக்கு நண்பன் காச்சல் வந்துட்டு என்றெல்லோ நினைச்சேன்..!!

உண்மையான நற்பு இன்னும் இருக்கு வரோ அது உங்களுக்கு இன்னும் வாய்க்கவில்லை அவ்வளவும்தான்..!!//


மாம்ஸ், காய்ச்சல் திரும்ப வாராத மாதிரி ஒரு மருந்தையெல்லோ வேலாயுதம் வந்தபோது தந்தனீங்கள்.. ஹீ ஹீ நாம திருந்திட்டம்லே!

நல்ல நட்பு எனக்கு வாய்க்கவில்லை. அல்லது எனக்கு வாய்த்த நட்புக்கள் அவ்வளவு நல்லதல்ல. (ஒரு சிலரைத் தவிர்த்து)

KANA VARO said...

Yoga.S.FR said...
வணக்கம் வரோ!காலமாற்றம் எல்லாவற்றையுமே மாற்றிவிட்டது என்பதே உண்மை!உலகம் அவசரக் குடுக்கையாகிவிட்டது இல்லையா?அதனால் இந்த நிலை!ஓடும் புளியம்பழமும் போல் என்று சொல்வார்களே?அப்படி ஆகிவிட்டது நட்பு!//

உண்மை தான் ஐயா, ஓடு புலியைத் தின்ன நினைக்கிறது.

KANA VARO said...

Yoga.S.FR said...
என்றாலும் உங்களுக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான்!(தலைப்பைச் சொன்னேன்!நிரூபன் பாஸ் வழிகாட்டலோ?)//

வலையில நாலாவது வருசத்தில காலடி எடுத்து வைச்சிட்டம் எல்லோ, இது கூட வராட்டி.. ஹி ஹி

Ramani said...

நீங்கள் சொல்லிப் போவது அனைத்தும் எனக்கும்
ஒத்துப்போவதாக உள்ளது
ஆயினும் குறைந்த பட்சமாக மனம் திற்ந்து பேசச் சாத்தியப்பட்ட
நண்பர்கள் இல்லையெனில் அது ஒரு குறைபோலத்தான் படுகிறது
சொல்ல நினைப்பதை மிகத் தெளிவாகச் சொல்லிப் போகிறீர்கள்
அதுதானே எழுத்தின் சிறப்பு
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

KANA VARO said...

Ramani said...
நீங்கள் சொல்லிப் போவது அனைத்தும் எனக்கும்
ஒத்துப்போவதாக உள்ளது//

நன்றி அண்ணே! தொடர்ந்து வாருங்கள்.

K.s.s.Rajh said...

தலைப்பை பார்த்து நண்பன் படம் பற்றிய பதிவு என்று பல்பு வாங்கிவிட்டேன்.

All is well ஹி.ஹி.ஹி.ஹி.....

Yoga.S.FR said...

KANA VARO said...

Yoga.S.FR said...
என்றாலும் உங்களுக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்திதான்!(தலைப்பைச் சொன்னேன்!நிரூபன் பாஸ் வழிகாட்டலோ?)//

வலையில நாலாவது வருசத்தில காலடி எடுத்து வைச்சிட்டம் எல்லோ, இது கூட வராட்டி.. ஹி ஹி////அப்பிடியெண்டால் நாங்களெல்லாம் "மீன்" எண்டு சொல்லுறியள்?(வலையில மாட்டுறது மீன் தானே?)

Yoga.S.FR said...

KANA VARO கூறியது...

Powder Star - Dr. ஐடியாமணி கூறியது...
ஹாய், மச்சான் சார்! என்ன தைரியம் இருந்தால், ஹன்சியோட இடுப்பை அடுப்பு அப்டீன்னு சொல்லியிருப்பீங்க? அடுப்பில் தான் சூடு அதிகம்! ஹா ஹா ஹா ஹா !!//

athaane!////என்ன,அதானே????ஒம்லேட்டா போடப் போறியள்?????