Pages

Thursday, January 12, 2012

சினிமா விமர்சனத்தின் போது முட்டையில் “…” பிடுங்குவது எப்படி?


இது, பொதுவாக சினிமாவை விமர்சிக்கும் பதிவர்கள், ஊடகவியலாளர்கள் எல்லோருக்குமானது. (அதில் நானும் உள்ளடங்குவேன்)

ஒரு சினிமாவைப் பார்க்கிறம், பிடிச்சிருந்தா “நல்லபடம் - வெற்றிப்படம்” என்றெல்லாம் சொல்லுவோம். பிடிக்கலைன்னா “மொக்கைப்படம் - பப்படம்” என்றெல்லாம் சொல்லுவோம். அதன் குறை நிறைகளை ஆராய்வோம். இது, அந்த சினிமாவிற்கு கொடுக்கப்படும் விமர்சனம்.

நான் உலகப்படம் பற்றியெல்லாம் கதைக்க வரேல்ல. ஒன்லி தமிழ்ப்படங்கள் பற்றிப் பார்ப்போம்.

தமிழ்சினிமா எங்களுடன் நெருக்கமானது. அதில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலருமே எங்களுக்கு அறிமுகமானவர்களாகத் தான் இருப்பார்கள். விமர்சனம் என்று எழுதவரும் போது “நடுநிலை” என்ற தன்மை பேணப்பட வேண்டும் என எதிர்பார்ப்போம். ஆனால் பல இடங்களில் அது தவற விடப்படுகின்றது. எமது சுய விருப்பு – வெறுப்புக்கள் அந்த விமர்சனங்களோடு இணைந்து விடுகின்றது.

சினிமா விமர்சகர்களை மூன்று வகைப்படுத்தலாம். ஒன்று “குறித்த சினிமாவிற்கு” ஆதரவானவர்கள், இரண்டாவது எதிரானவர்கள், மற்றையது நடுநிலையாளர்கள். இங்கு மூன்றாம் தரப்பு எப்போதும் பொய்த்துப்போகின்றது.

நான் அன்றும் - இன்றும் - என்றும் நம்புவது “நடுநிலை” என்பது “ஏதோ ஒரு பக்கம் சார்ந்தது தான்” என. அது உண்மையும் கூட.. இந்த சினிமா விமர்சனத்திலும் விமர்சகர்கள் ஏதோ ஒரு பக்கம் சார்ந்து விடுகிறார்கள். நடுநிலையாக கொடுக்க முற்படும் போது அங்கு செயற்கை இழை தட்டிவிடுகிறது.

ஆதரவானவர்கள் - எதிரானவர்கள், இவர்களை ஏதோ ஒரு பக்கம் சார்ந்தவர்கள் என ஒதுக்கிவிடலாம். ஆனால் நடுநிலையாளர்கள் கொடுக்கும் இம்சைகள் பல இடங்களில் சலிப்பை ஏற்படுத்தும்.

இன்று ஊடகங்கள் எல்லாம் ஏதோ ஒரு நடிகனையோ (அல்லது நடிகர்களையோ) தூக்கிப்பிடிப்பதும் - பந்தாடுவதும் வழமையாகிவிட்டது. (பார்க்க ஜெயா டி.வி விருதுகள் 2011) அதனால் “நடுநிலை”யை எதிர்பார்க்கும் ஊடகங்களிடமே நடுநிலையை மக்கள் எதிர்பார்ப்பதில்லை. இந்த நிலையில் தமது சொந்த விருப்பு – வெறுப்புக்களை பதிவுகளாக எழுதிவரும் பதிவர்களிடம் நடுநிலையை அதுவும் சினிமா சம்பந்தப்பட்ட விடயங்களில் நடுநிலையை எதிர்பார்க்க முடியாது.

இன்று மூன்று பதிவர்களின் “நண்பன்” திரைப்பட விமர்சனத்தை என் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டேன். அதில் ஒரு பதிவைப் பகிர்ந்ததற்காக என் நண்பர்கள் பலரிடம் இருந்து “செம திட்டு”. எல்லோரும் கேட்ட ஒரே கேள்வி, “ஏண்டா முட்டையில … பிடுங்கிற மாதிரி..” குறைகளை எழுதியிருக்கிறாரா? இவருக்கு ஏதாவது பிரச்சினையா?

குறித்த பதிவரின் திரை விமர்சனங்களுக்கு நான் தீவிர விசிறி. நான் மட்டுமல்ல பதிவுலகில் பலரும் அவரது விசிறிகள் தான். அவர் விமர்சனம் எழுதும் முறையே தனி ஸ்டைலானது. அவரது நண்பன் விமர்சனத்தையும் படித்தேன். தலைப்பு – உள்ளடக்கம் உள்ளிட்ட அனைத்திலும் நண்பனை பாராட்டியிருக்கிறார். ஆனால் “லாஜிக் சொதப்பல்கள்” என பட்டியலிட்ட விடயங்களை பார்த்தால், அவர் பார்க்கும் முதல் தமிழ்ப்படம் நண்பனோ? என நினைக்கத் தோண்றுகின்றது. பிழைகளைச் சுட்டிக்காட்டலாம் தவறில்லை. ஆனால் வலிந்து பிழைகளை உருவாக்குவது என்பது உங்கள் விமர்சனங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளும் ஒரு செயற்பாடு.

உங்களிடம் ஒரு கேள்வி, இந்த வீடியோவைப்பாருங்கள்..


வடிவேல் திரும்பிப்பார்க்கும் போது கூட இருந்தவர்கள் மறைவதென்பது “லாஜிக் மீறல்” இல்லையா? இதே போன்ற காட்சிகள் எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து இன்றுவரை திரைப்படங்களில் வருகின்றதே.. அதையெல்லாம் ஒரு விடயமாக எடுத்து அதற்கு தனிப்பந்தி விளக்கம் எழுதுவீர்களா?

நண்பன் விமர்சனத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் லாஜிக் மீறல்களில் பல இவ்வாறானதே, இது ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதாக தோணுகின்றது. இனிவரும் காலங்களில் விமர்சனம் எழுதும் போது என்னைப்போன்ற வாசகர்களின் கோரிக்கைகளையும் கொஞ்சம் செவிமடுங்கள்.

ஹிந்தியில் வெளியாகி பெருவெற்றி பெற்று பலராலும் பாராட்டப்பட்ட 3இடியட்ஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் போது இன்னும் பல மடங்கு குறைநிறைகள் பற்றி சிந்தித்து படக்குழுவினர் படத்தை எடுத்திருப்பார்கள். நண்பன் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்ததைப் போலவே (அல்லது ஒரு படி மேலாக) நல்ல விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில் உங்கள் விமர்சனம் பொருத்தமாக படவில்லை. நடுநிலையாளர்களிடம் (?) சமூகம் நிறையவே எதிர்பார்க்கும்.

டிஸ்கி : இன்று வெளியான நண்பன் திரைப்படம் உலகளாவிய ரீதியில் பல திரையரங்குகளை இன்னும் ஆக்கிரமிக்கவில்லை. அதற்குள் திருட்டு வீடியோ இணையத்தில் வந்துவிட்டது. 
வாழ்க திருட்டு வீடியோ கும்பல்!

12 comments:

KANA VARO said...

நல்லவேளை அந்தப்பதிவர் இன்னும் விமர்சனம் எழுதல. இல்லாட்டி, இதை தனக்கு போட்ட உள்குத்து பதிவு என நினைச்சிடுவர்.

K.s.s.Rajh said...

ஆகா கெளம்பீட்டாங்கையா கெளம்பீட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மகேந்திரன் said...

திருடர்கள் என்றும் திருந்துவதில்லை...
அனைத்தையும் மீறி திரைப்படம் வெற்றி பெறட்டும்.

Yoga.S.FR said...

வணக்கம் வரோ!வெளிக்குத்துப் பதிவு!!!///KANA VARO said...

நல்லவேளை அந்தப்பதிவர் இன்னும் விமர்சனம் எழுதல. இல்லாட்டி, இதை தனக்கு போட்ட உள்குத்து பதிவு என நினைச்சிடுவர்.////எழுதிட்டாரே????

Yoga.S.FR said...

"மயிர்"கெட்ட வார்த்தை அல்ல!அதாவது,இடம்,பொருள் ஏவல் என்றிருக்கிறது தானே?இந்த இடத்தில் பாவிக்க முடியும்!நண்பன் படத்தில் கூட உதட்டோட்டு உதடு சேரும் முத்தக் காட்சி உண்டாமே?"கதை"க்கு அது அவசியமாம்!சொன்னார்கள் படம் எடுத்தவர்கள்!!!!!

காட்டான் said...

நான் பார்த்த எல்லா விமர்சனங்களும் படம் நல்லது என்றுதான் சொல்கிறார்கள்.. அத்தோடு சங்கர் எடுத்த படங்களிலேயே வேகமாய் முடிக்கப்பட்ட படம் இது என்றுதான் நினைக்கிறேன்..!

காட்டான் said...

உண்மையின் முன்னே நடு நிலை என்று ஒன்றில்லை..!! உண்மையின் பக்கம் சாய்ந்தே ஆகனும்..!

KANA VARO said...

Yoga.S.FR said...
வணக்கம் வரோ!வெளிக்குத்துப் பதிவு!!!///KANA VARO said...

நல்லவேளை அந்தப்பதிவர் இன்னும் விமர்சனம் எழுதல. இல்லாட்டி, இதை தனக்கு போட்ட உள்குத்து பதிவு என நினைச்சிடுவர்.////எழுதிட்டாரே????//

நான் பதிவில சொன்னவர் எழுதிட்டார், இன்னோராள் எழுதல.. நான் என்ன எழுதினாலும் தனக்கு எதிரா எண்டு சிலவேளை அவர் நினைச்சிடுவர். அதை தான் சொன்னேன்.

Yoga.S.FR said...

திருட்டு வி.சி.டி கொம் இந்தப் படத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிறது!என்ன கொடுமை சரவணா????

அப்பு said...

நண்பரே
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையோடு..

அம்பலத்தார் said...

வழமையான கிராபிக்ஸ் வேலைகள் போன்ற சங்கரது முத்திரைபதிக்கும் விடியங்கள் குறைவாகவுள்ள வித்தியாசமான சங்கர் படம். ரொம்ப நாளுக்கு அப்புறம் இந்த விஜய் படத்தை ரொம்ப ரசித்து பார்த்தேன். அதிக விமர்சனங்கள் படித்து கடுபாயிட்டிங்களோ வரோ. சும்மா சொல்லப்படாது நல்லாத்தான் எழுதியிருக்கிங்க.

Riyas said...

சேம் பீலிங்க்.. நீங்க யாரச்சொல்றிங்கன்னு புரியுது.. அவர்களுக்கு சொல்ல மட்டும்தான் தெரியும்!