Pages

Sunday, January 29, 2012

காதலில் சொதப்புவது இப்பிடியா? (வீடியோ)


“காதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி?” அப்பிடீன்னு யாராவது சொல்லித்தந்தால் அது பிரையோசனமாக இருக்கும். ஆனால், “காதலில் சொதப்புவது எப்படி?” என சொல்லித்தர வருகிறார்கள். முன்னதை விட இரண்டாவது பெட்டராக இருக்கும் என்பது என் கருத்து. காரணம் தவறு எங்கே என கண்டறிந்து அதைத்திருத்திக் கொண்டால் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும்.
சித்தார்த் : ஐ ஆம் முன்னா..
விவேக் : அதுக்கென்ன இருந்திட்டுப்போ!
சித்தார்த் : இல்ல சார், என் பேரு முன்னா.

குபீரென சிரிப்பை வரவழைக்க கூடிய (படம் பார்ப்பவர்களுக்கு) இந்த நகைச்சுவை இடம்பெற்றது சங்கரின் ”பாய்ஸ்” படத்தில்.. அந்தப்படத்திலேயே முதன் முதலில் ஐந்து நாயகர்களில் ஒருவராக சித்தார்த் அறிமுகமானார். பிரபல இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்து ஏற்கனவே ”கன்னத்தில் முத்தமிட்டால்” படத்திலும் ஒரு சீனில் வந்து போனார். ”பாய்ஸ்” இற்கு பிறகு ”ஆயுத எழுத்து” படத்தில் நடித்தார். அதன் பிறகு ஆளைத் தமிழ் சினிமாவின் பக்கம் காணவே இல்லை.

மிகப்பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்த சித்துக்கு தமிழிலேயே அதிகளவான வாய்ப்புக்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாமல் அவர் ஆந்திராப் பக்கம் ஒதுங்கிக் கொண்டார். இது தானாக ஏற்படுத்திக் கொண்டதா என தெரியவில்லை. ”பாய்ஸ்” படத்தில் அவருடன் கூட நடித்த பரத் நிறைய தமிழ்படங்களில் நடித்து விட்டார். நகுலும் சில வருடங்கள் தாமதமாக நல்ல இடத்தை பிடித்துக் கொண்டார். மணிகண்டன் ஒரு சில படங்களுடன் விட்டுவிட்டார். தமன் பிரமாண்டமான இசையமைப்பாளராக உருமாறிக்கொண்டிருக்கிறார். அழகும், திறமையும் கொண்ட சித்தார்த் மட்டும் மிஸ்ஸிங். ஆனால் அவர் தெலுங்கில் பல விருதுகள் பெற்று முன்னணி ஹீரோவாக மாறிவிட்டார். இடையில் இரண்டு ஹிந்திப்படங்களிலும் நடித்திருந்தார்.

தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து சினிமாவிலும் அறிமுகமாகிய சித்தார்த்துக்கு தமிழ் படங்களில் நடிக்க ஏன் கசக்கின்றது என நினைத்திருந்தேன். 10 வருடங்கள் கழித்து மீண்டும் ரீ-என்ட்ரி ஆனார் ”நூற்று என்பது (180)” திரைப்படத்தின் மூலம். இது தெலுங்கிலும் வெளியானது.

சினிமா ஹீரோக்கள் பொதுவாக அம்சமாகத்தான் (அழகு ப்ளஸ் கட்டுமஸ்தான உடல்) இருப்பார்கள். ஆனாலும் அவர்கள் எல்லாம் பெண்களுக்கு பிடித்தமானவர்களாக இருக்க மாட்டார்கள். தமிழில் அவ்வாறான வாய்ப்பு அரவிந்தசாமி, மாதவன் போன்ற சிலருக்கே கிடைத்தது. அந்த இடத்தைப் பிடிக்க கூடிய தகுதி சித்தார்த்துக்கு நிறையவே இருந்தது. ஆனால் நீண்ட காலமாக அதை மிஸ் செய்து விட்டார். இனி அவ்வாறான பெண்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தெலுங்கு பெண்களுக்கு இவர் மேலுள்ள கிறக்கத்தை அண்மையில் கண்டேன். எஸ்.ஆர்.எம் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இவருக்கு தெலுங்கு விசிறிகள் குறிப்பாக பெண்கள் வழங்கும் ஆதரவை பார்த்து வியந்தேன். அண்ணன் சாருகானின் வழியில் இவரும் பெண்களை (ரசிகைகள்) பொது இடத்தில் கட்டிப்பிடிக்கும் செயற்பாடுகளையும் மேற்கொள்கிறார்.
சித்தார்த்தின் 4ஆவது தமிழ் படம் ”காதலில் சொதப்புவது எப்படி?” இது தெலுங்கிலும் எதிர்வரும் பெப்.17 அன்று வெளிவர இருக்கின்றது. இப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் ஏற்கனவே 10 நிமிடங்களில் எடுத்திருக்கும் ”காதலில் சொப்புவது எப்படி?” என்ற குறும்படத்தைப் பார்த்து இம்பிரஸ் ஆன சித்து அதையே கருவாகக் கொண்டு முழு நீள படமாக்கியிருக்கின்றார். இப்ப இருக்கின்ற இளைய தலைமுறையினரில் தன்னைப்போல் ஒருவன் காதலில் சொதப்பியிருக்க முடியாது. அந்த அனுபவங்களை எல்லாம் வைத்து பேராசிரியர் போல இப்படத்தின் மூலம் பாடம் சொல்லப்போகிறேன் என சித்து கூறுகிறார்.

காதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி? என்கிற கேள்விக்கு அவர் தரும் பதில், ”காதலிக்காமல் இருக்க வேண்டும்” (வெளங்கிரும்). 

பாடசாலைக் காலத்திலிருந்து கிட்டத்தட்ட ஐம்பது வயது வரை காமம் சாராத ஆண் - பெண் காதல் இருந்திட்டே இருக்கு. இதில, பள்ளிக்காதல் பெரும்பாலும் பாதி வழி வரை தான். அதே போல் 30 வயதைத் தாண்டினால் அது முற்றிய காதல். முக்கியமான காதல் பருவம் 18 வயது முதல் 30 வயது வரை என்பது என் கணிப்பு. இதில் படிக்கும் இடங்கள் மற்றும் வேலை பார்க்கும் இடங்கள் ஆகியவற்றில் காதல் ஏற்படும். வேலை பார்க்கும் இடங்களில் காதலித்தால் அது ஓரளவு சொதப்பல் இல்லாமல் ஒப்பேறிடும் என நம்புறன். படிக்கும் இடங்களில் ஏற்படும் காதலில் தான் நிறைய சொதப்பல்கள் வரும்.

இவ்வாறானவர்கள் ஒரே வயதினராகவோ அல்லது ஒரு சில வயது வித்தியாசமானவர்களாகவோ இருப்பார்கள். இவர்கள் காதலிக்கும் போது அன்பு இருக்கும். ஆனால் ஒருவர் மீது ஒருவருக்கு மதிப்பு அறவே இருக்காது. இரு தரப்பினருமே தன்னை மற்றவர் அனுசரித்துப் போக வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். தவிர, இருவருக்கும் இடையே ”ஈகோ” என்பது அதிகளவில் இருக்கும். ஒரு நிமிடம் மனசு விட்டு பேசாமல் இந்த ஈகோவை தலையில் ஏற்றி எத்தனை காதல்கள் பிரிந்திருக்கும்?. எந்த விடயத்துக்கு சண்டை போடலாம், எதற்கு போடக்கூடாது என்பது தெரியாமலேயே சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். ஒத்த வயதினரிடையே யார், யாருக்கு அட்வைஸ் பண்ணுவது. நான் சில விடயங்களை அவதானித்து எடுத்துக் கொண்ட முடிவு ”சொதப்பல் இல்லாத காதலுக்கு குறைந்தது ஐந்து வருட வயது வித்தியாசமாவது ஆண் - பெண்களுக்கு இடையில் வேண்டும்”.

நிச்சயம், காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் காதலர்கள் விடும் தவறுகளை அவர்களுக்கு உணர்த்துவதற்கு ஒரு வழிகோலாக இருக்கும். படத்தைப் பார்த்தாலும் காதலர்கள் தங்கள் பிழைகளை உணராமல் மீண்டும் சொதப்புவார்கள் என சித்தார்த் கூறுகிறார். ஹீ ஹீ ”அதான்யா காதல்!”

காதலில் சொதப்புவது எப்படி குறும்படம்
10 நிமிசத்திலை இவ்வளவு விசயம் சொன்னால் ரெண்டரை மணித்தியாலத்திலை எவ்வளவு விசயத்தைச் சொல்லலாம். ஐ ஆம் வெயிட்டிங் போ காதலில் சொதப்புவது எப்படி?

9 comments:

நிரூபன் said...

வணக்கம் சார்,


உண்மையிலே காதலில் சொதப்புவதற்கும் ஒரு கலை வேண்டும், உங்களிடம் நிச்சயமாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

நிரூபன் said...

பாய்ஸ் படத்திற்கும், வரோ சாரின் காதலுக்கும் ஏதும் தொடர்பிருக்குமோ?
வசனங்களை மறக்காம எழுதியிருக்காரு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

நல்லதோர் அறிமுகத்துடன் காதலில் சொதப்புவது படத்தினைப் பார்க்கும் ஆவலைத் தந்திருக்கிறீஇங்க,
அடியேன் ஏலவே இப் படத்தினைப் பார்த்திட்டேன்,
ஆனாலும் நன்றிகள்.

Yoga.S.FR said...

வணக்கம் வரோ!காதலில் சொதப்புவது எப்படி?பிரமாண்டமான,அறிவுபூர்வமான ஓர் தலைப்பை தேர்வு செய்து,அழகாக விளக்கியிருக்கிறீர்கள்!வாழ்க,வளர்க உங்கள் மேலான பணி!இந்தப்படம் பலரின் ஆவலை,ஆசையைப் பூர்த்தி செய்யும் என நம்புவோம்!

அம்பலத்தார் said...

காதலில் சொதப்பினது எப்படின்னு தெரியணுமென்றால் என்னையமாதிரி ரொம்பபேர் இருக்காங்க. கதையளைக்கேட்டியள் என்றால் நீங்க மெகா சீரியலே எழுதலாம்.

அம்பலத்தார் said...

//ஐ ஆம் வெயிட்டிங் போ காதலில் சொதப்புவது எப்படி?//
varo, don´t wait for காதலில் சொதப்புவது எப்படி? சொந்தமாக முயற்சித்தால் ரொம்ப அனுபவங்கள் கிடைக்கும். Try and get your own experience

அம்பலத்தார் said...

//ஐ ஆம் வெயிட்டிங் போ காதலில் சொதப்புவது எப்படி?//
varo, don´t wait for காதலில் சொதப்புவது எப்படி? சொந்தமாக முயற்சித்தால் ரொம்ப அனுபவங்கள் கிடைக்கும். Try and get your own experience

roshaniee said...

good analyze keep it up

தர்ஷன் said...

கதையே இல்லாத அந்த குறுபடத்தை தனது மேக்கிங்கால் சுவாரசியப் படுத்தியிருப்பார் இயக்குனர். சோ நானும் ரெண்டரை மணி நேரப்படத்தை எக்கச் சக்கமாய் எதிர்பார்க்கிறேன்