கடந்த 10 வருசத்தில விஜய் படம் ஒன்று வெளியாகி ஐந்து நாட்களின் பின்னர் பார்ப்பது இதுவே முதல் தடவை. (போக்கிரி மட்டும் விதிவிலக்கு, அது ஏன் அப்பிடீன்னு சரியாச் சொல்லுங்க பார்ப்பம்?) பொங்கலுக்கு விஜய் படம் வெளியாகியிருக்கு, அதுக்கு வரோ விமர்சனம் எழுதாட்டி நாளைக்கு வரலாறு நம்மளை தப்பா சொல்லும் கண்டியளோ.! எனக்கு வரலாற்றிலை இடம்பிடிக்கிற ஆசையெல்லாம் இல்லை. அதனால எழுதிடுறேன்.
முதல்ல, இந்தப் படத்தை தமிழ்ல ரீமேக் பண்ணணும் எண்டு முடிவெடுத்து வாங்கின ஜெமினி பிலிம்ஸ்ஸ_க்கு கோடி நன்றிகள் சொல்லணும். இரண்டாவது, தமிழ் சினிமாவின் “மல்டி ஹீரோ” சாபத்தை உடைத்தெறிந்து புது ட்ரெண்ட் உருவாக்கின இளைய தளபதி விஜய்க்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். இறுதியாக, தன்னிலை விட்டிறங்கி வந்து ஒரு நல்ல மெசேஜ் தமிழ் மக்களுக்கும் போய்ச்சேர வேண்டும் என நினைத்து இயக்குனர் பணியை ஏற்று சிறப்பாக செய்து முடித்த பிரமாண்ட இயக்குனர் சங்கருக்கு நன்றிகள்.
‘விஜய் படம் என்றாலே ரீமேக்| அப்பிடி ஒரு கதை கோடாம்பாக்கத்திலை அடிபடுறது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதற்கு இந்தப்படமும் விதிவிலக்கல்ல. ஆனால் எடுத்துக் கொண்ட கதை தான் பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. ஒரு மொழியிலை வெளியான படத்தை இன்னொரு மொழியிலை ரீமேக் பண்ணுறது பெரிய விசயம் இல்லை. ஆனால் பல மொழி சினிமா விரும்பிகளையும் கவர்ந்த படத்தை ரீமேக் பண்ணுவதென்பது கத்தி நுனியில் நடப்பதைப் போன்றது. தைரியமாக அதை எடுத்து வெற்றியும் பெற்றிருக்கும் நண்பன் குழாமுக்கு பெரிய பாராட்டுக்கள்.
விஜய் நடித்த ரீமேக் படங்களில் நான் முழுவதுமாக பார்த்த ஒரிஜினல் படம் வில்லு (அதன் ஹிந்தி ஒரிஜினல் பெயரை மறந்துவிட்டேன்). வில்லுவை திரையில் பார்த்த போது ஏற்கனவே கதை தெரியும் என்பதால் சப்பென ஆகிவிட்டது. படமும் பப்படமாக பெட்டியில் முடங்கியது. த்ரீ இடியட்ஸ் ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முதல் பார்த்திருந்தாலும் நண்பன் வெளிவர இரண்டு வாரங்களுக்கு முன்னர் திரும்பவும் பார்த்து ஒவ்வொரு காட்சியையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டேன். ஆங்கில உப தலைப்புக்கள் இல்லாமல் பார்த்த படியால் பல காட்சிகளில் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவிட்டாலும் அங்க அசைவுகளைக் கொண்டு ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன்.
சங்கர் உட்பட எல்லாரும் சொன்னார்கள், த்ரீ இடியட்ஸை மறந்துவிட்டு நண்பன் பார்க்க வாருங்கள் என.. அது எப்பிடீங்க முடியும். ஆனாலும் எங்களைக் கட்டிப்போட்டு புதுப்படமாக பார்க்க வைத்த விந்தை சங்கரையும், நண்பன் நட்சத்திரப்பட்டாளங்களையுமே சாரும். எப்படி த்ரீ இடியட்ஸ் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாது ஆரம்பித்து சிரிப்பு, அழுகை, மகிழ்ச்சி, துக்கம் என பல உணர்வுகளைத் தந்ததோ அதே வேலையை நண்பனும் செய்தான். (கதை தெரிந்திருந்தும்)
புதுப்படம் போன்ற உணர்வைத் தந்த காட்சிகள் பல இருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவையாக சத்யனின் மேடைப்பேச்சு, ஜீவா குடித்துவிட்டு வகுப்பறையில் உளறுவது, ஸ்ரீகாந்த தந்தைக்கு தன் விருப்பத்தை புரிய வைப்பது, அனுஜாவிற்கு பிரசவம் பார்க்கும் நெகிழ்ச்சியான காட்சி போன்றவை அமைந்தன. இந்தக் காட்சிகளுக்கு உணர்வூட்டிய நட்சத்திரங்களே எம் கண் முன் ஒரு புதிய படத்தைத் தந்தார்கள்.
முக்கியமான பாத்திரங்களில் இலியானா, ஸ்ரீகாந்தை தவிர வேறு எவரும் எனக்கு உறுத்தலாக தெரியவில்லை. மற்றைய பாத்திரங்களில் நடிப்பதற்கு அவர்களை விட வேறு எவரும் தமிழ்சினிமாவில் பொருத்தமானவர்களாக இருப்பார்களா என்பது சந்தேகமே!
ஒரே கதையானாலும் நண்பன் வேறு த்ரீ இடியட்ஸ் வேறு. இதை ஒப்பிடுவது என்பது பொருத்தமற்ற ஒன்று. ஆனாலும் மனதில் பட்ட சில விடயங்களுடன் தமிழ் பாத்திரப்படைப்புக்கள் பற்றி பார்க்கலாம்.
விஜய் - அமீர்கான்
அமீர்கானின் இடத்திற்கு தமிழில் விஜயைத்தவிர எவரும் பொருத்தமில்லை என்பது நான் சொல்லும் விடயமல்ல. அனைத்து சினிமா விமர்சகர்களும் இதையே சொல்கிறார்கள். நான் மட்டும் என்ன விதிவிலக்கா? இப்படத்தில் விஜய் நடிப்பது என்பது ஒரு தளம்பல் நிலையில் இருந்தபோதும் இறுதியில் நடித்தே முடித்துவிட்டார். ஒவ்வொரு நடிகனுக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு படத்தைக் கொண்டு வரியல் போடுவார்கள். விஜய்க்கும் பூவே உனக்காக – காதலுக்கு மரியாதை – கில்லி என்று இருந்த வரியலை 8 வருடத்திற்கு பிறகு நண்பன் உடைத்திருக்கின்றது. இனி நண்பனுக்கு பிறகு விஜய் எப்படி என்பதைத் தான் தமிழ்சினிமா பார்க்கும்.
“அந்த விஜயா இவர்?” என ஆச்சரியப்படுமளவிற்கு புதிய பரிமாணம் ஒன்றை நண்பனுக்காக எடுத்திருக்கிறார் விஜய். கதைக்கு எது தேவையோ அதை மட்டும் செய்திருக்கிறார். ஜூனியர் நடிகர்களுடனும் சத்தியராஜ் உடனும் எந்தவொரு ஈகோவும் இல்லாமல் நடித்திருக்கிறார். ஐந்து பேரிடம் கன்னத்தில் “பளார்” என்று அடி வாங்கிக் கொண்டு நடிக்கும் மாஸ் ஹீரோ தமிழில் யாரப்பா? அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் ஜீவாவும், ஸ்ரீகாந்தும் மிதித்து துவைத்து விடுவார்கள். இப்படியான சீனை நிச்சயம் மாற்றியிருப்பார்கள். அட்லீஸ்ட் மிதிக்கும் காட்சியை ஆவது தூக்கியிருப்பார்கள் என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால் அவ்வளவு அழகாக ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்பட்டிருக்கின்றது. ஆத்திர அவசரத்தில் விஜய் ரசிகர்கள் தியேட்டரில் “பி..பி…பி” என செந்தமிழ் சொற்பொழிவுகளை நிகழ்த்தினாலும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொண்டார்கள். இது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வெற்றி. முதல் படத்திலேயே விரல் சுண்டி நடிக்கும் இளசுகள் கூட இனி தம்மை மாற்றிக் கொள்வார்கள். தைரியமாக மல்டி ஹீரோ சப்ஜெட்களில் நடிப்பார்கள். புதுப்பாதை வகுத்த நம்ம தளபதிக்கு ஜெ!
துரு துருவென குறும்புத்தனமாக நடிக்கும் காட்சிகள் விஜய்க்கு கை வந்த கலை. இந்தப்படம் முழுவதுமே அப்படியான ஒரு விஜய் எனும் போது அசால்டாக நடித்துவிட்டுப்போகிறார். காமெடிக் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். பிரசவம் பார்க்கும் காட்சியில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் படம் முழுவதும் கலக்கியிருக்கிறார். அமீர்கானையும் விஜயையும் நான் ஒப்பிடவில்லை. ஆனால் தனித்தனியாகப்பார்த்தால் ஹிந்திக்கு த்ரீ இடியட்ஸில் அமீர்கான் எவ்வளவு வெற்றி கண்டாரோ, அதை விட ஒரு படி தமிழில் விஜய் வெற்றி பெற்றிருக்கிறார். ஏன்னா விஜய்க்கு இதெல்லாம் புதுசு.
நான் வித்தியாசம் காணும் ஒரு இடம் நடனம். படத்திற்கு நடனம் முக்கியமில்லை. ஆனால் ஒரு இந்திய சினிமா கதாநாயகனுக்கு அது முக்கியம் தானே! அந்த இடத்தில் விஜய் முந்திவிடுகிறார். ஆல் இஸ் வெல் பாடலில் விஜயைத் தனியே ஆடவிட்டு ஜீவாவும், ஸ்ரீகாந்தும் ரசிப்பதைக்கூட நான் ரசித்தேன். புத்தகத்திற்கு (BOOK) வரைவிலக்கணம் சொல்லுமிடத்தில் அமீர் முந்திவிடுகிறார்.
த்ரீ இடியட்ஸ் முதலில் நண்பனாக எடுக்கப்பட்டிருந்தால் அமீர்கான், விஜய் செய்ததைத் தான் செய்திருப்பார். (கஜனியில் சூர்யா போல் நடித்தது) இங்கு அமீர்கானுடன் விஜயை ஒப்பிடுவது துரதிஸ்டவசமானது. ஆனாலும் விஜய் பல இடங்களில் தன் பாணியிலேயே நடித்திருக்கிறார். குஷிக்கு பிறகு ஒரு லிப்ட் டூ லிப்ட் முத்தக்காட்சி. இதற்கு ஹிந்தி இயக்குனருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
மொத்தத்தில் விஜய் - தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர்!
தொடரும்



24 comments:
நல்ல என்டர்டைமண்ட் படம்..
////ஆத்திர அவசரத்தில் விஜய் ரசிகர்கள் தியேட்டரில் “பி..பி…பி” என செந்தமிழ் சொற்பொழிவுகளை நிகழ்த்தினாலும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொண்டார்கள்.// இவனுக தியட்டருக்கு விஜயை பார்க்க வந்தவனுகளா? படம் பார்க்க எண்டு இல்லையா?
///குஷிக்கு பிறகு ஒரு லிப்ட் டூ லிப்ட் முத்தக்காட்சி. இதற்கு ஹிந்தி இயக்குனருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.// அவர் கிஸ் அடிக்கிறதில உங்களுக்கு அவ்ளூ சந்தோசம்..
தலைவன் அடிச்சா தொண்டன் அடிச்ச போல தானே ;)
ஹிஹி ம்ம்ம் ஒத்துக்கிறேன்!!!
சத்யனின் மேடைப்பேச்சு செம ஹிட்
வரோ....
நண்பன் பற்றிய பகிர்வு அருமை...
கா.ம, கில்லிக்கு பிறகு விஜய் நடித்துள்ளார்.......
இனியும் இந்த மாதிரி கேரக்டர்கள் விஜய் நடிக்க வேண்டும்......
எனக்கும் இந்த படம் பிடிச்சிருந்தது.. ரீமேக்காக இருந்தாலும் ரசிக்கலாம்..
விஜய் இதுமாதிரியான ஹீரோயிசம் இல்லாத புதிய ட்ரெண்டில் எத்தனை படம் தந்தாலும் பார்க்கலாம்.. ஆனா நடிப்பாரான்னுதான் சந்தேகம்,
சத்யன் தூள்..
நல்ல பகிர்வு வரோ..
நண்பன் ஒரு நல்ல தரமான படம்.
இன்று என் தளத்தில் விரிவாக எழுதியுள்ளேன் பாருங்க பாஸ்
வணக்கம்,வரோ!விமர்சனம் போல் படமும் நன்றாகவே இருந்தது!ஷங்கருக்கு ஜே!!!!!
K.s.s.Rajh said...
நண்பன் ஒரு நல்ல தரமான படம்.
இன்று என் தளத்தில் விரிவாக எழுதியுள்ளேன் பாருங்க பாஸ்.///////பாத்தாச்சு!இலியானாவிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றும் சொன்னால்.............................!
நண்பன் படம் வித்தியாசமான படம்.அதுவும் என்னை போன்ற மூல படத்தை பார்க்காதவர்க்கு.. அருமையான படம்!!
கந்தசாமி. said...
நல்ல என்டர்டைமண்ட் படம்..//
சிந்திக்கவும் வைத்தது
கந்தசாமி. said...
////ஆத்திர அவசரத்தில் விஜய் ரசிகர்கள் தியேட்டரில் “பி..பி…பி” என செந்தமிழ் சொற்பொழிவுகளை நிகழ்த்தினாலும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொண்டார்கள்.// இவனுக தியட்டருக்கு விஜயை பார்க்க வந்தவனுகளா? படம் பார்க்க எண்டு இல்லையா?//
இது விஜய் படத்துக்கு மட்டும் இல்லை சார். மன்காத்தாவுக்கும் இது தான் நடந்தது.. பொதுவா சினிமா நாயகனுக்கு அடிக்கும் போது எல்லா ரசிகர்களும் கொதிப்பார்கள். அதை இலங்கை - இந்தியாவில் தான் பார்க்க முடியும். லண்டனில நான் ரொம்பவே மிஸ் பண்ணுறன்.
கந்தசாமி. said...
///குஷிக்கு பிறகு ஒரு லிப்ட் டூ லிப்ட் முத்தக்காட்சி. இதற்கு ஹிந்தி இயக்குனருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.// அவர் கிஸ் அடிக்கிறதில உங்களுக்கு அவ்ளூ சந்தோசம்..
தலைவன் அடிச்சா தொண்டன் அடிச்ச போல தானே ;)//
இல்லையா பின்னே..
மைந்தன் சிவா said...
ஹிஹி ம்ம்ம் ஒத்துக்கிறேன்!!!//
நல்லவேளை ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை. இல்லாட்டி விரசம் ஆயிருக்கும் உங்க கமெண்ட்
சி.பி.செந்தில்குமார் said...
சத்யனின் மேடைப்பேச்சு செம ஹிட்//
லண்டனிலை உம்முன்னு முகத்தை வைச்சு படத்தை பார்த்தவன் கூட விழுந்து விழுந்து சிரிச்சான்
தமிழ்வாசி பிரகாஷ் said...
வரோ....
நண்பன் பற்றிய பகிர்வு அருமை...
கா.ம, கில்லிக்கு பிறகு விஜய் நடித்துள்ளார்.......
இனியும் இந்த மாதிரி கேரக்டர்கள் விஜய் நடிக்க வேண்டும்......//
அதே தான் என் விருப்பமும்.
அஜித் ரசிகர் உங்களுக்கே பிடிச்சிருக்கு எண்டா விஜய் சாதிச்சிட்டார்
Riyas said...
எனக்கும் இந்த படம் பிடிச்சிருந்தது.. ரீமேக்காக இருந்தாலும் ரசிக்கலாம்..
விஜய் இதுமாதிரியான ஹீரோயிசம் இல்லாத புதிய ட்ரெண்டில் எத்தனை படம் தந்தாலும் பார்க்கலாம்.. ஆனா நடிப்பாரான்னுதான் சந்தேகம்,
சத்யன் தூள்..
நல்ல பகிர்வு வரோ..//
காவலன் தந்த வெற்றி தான் நண்பனில் விஜயை நிறுத்தியது. இனியும் தொடரும் என நம்புவோம்
K.s.s.Rajh said...
நண்பன் ஒரு நல்ல தரமான படம்.
இன்று என் தளத்தில் விரிவாக எழுதியுள்ளேன் பாருங்க பாஸ்//
பார்த்து கமென்ட் உம் பண்ணியாச்சு
Yoga.S.FR said...
வணக்கம்,வரோ!விமர்சனம் போல் படமும் நன்றாகவே இருந்தது!ஷங்கருக்கு ஜே!!!!!//
நன்றி ஐயா..
Yoga.S.FR said...
K.s.s.Rajh said...
நண்பன் ஒரு நல்ல தரமான படம்.
இன்று என் தளத்தில் விரிவாக எழுதியுள்ளேன் பாருங்க பாஸ்.///////பாத்தாச்சு!இலியானாவிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றும் சொன்னால்.............................!//
அவரு நமீதா கிட்டயும் தான் நிறைய எதிர்பார்க்கிறார்..
காட்டான் said...
நண்பன் படம் வித்தியாசமான படம்.அதுவும் என்னை போன்ற மூல படத்தை பார்க்காதவர்க்கு.. அருமையான படம்!!//
மூலக்கதை பார்த்த பலருக்கும் பிடித்திருப்பது தான் அருமை
எனக்கும் 3 இடியட்ஸுடன் கம்பேர் பண்ணாமல் பார்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பின் (கில்லி) ஒரு விஜய் படத்தை ரசித்து பார்த்திருக்கிறேன்.
தர்ஷன் said...
எனக்கும் 3 இடியட்ஸுடன் கம்பேர் பண்ணாமல் பார்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பின் (கில்லி) ஒரு விஜய் படத்தை ரசித்து பார்த்திருக்கிறேன்.//
எட்டு வருசம்..
ஹீ ஹீ வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே!
Post a Comment